தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து ‘மக்கள் சேவகன்’ என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரவீன் சக்கரவர்த்தி, இன்னும் ஆறு மாதங்களில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ‘மக்கள் சேவகன்’ இயக்கமானது, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சரியான மற்றும் தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் நோக்கில் செயல்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இனிவரும் காலங்களில் காங்கிரஸ் கட்சியில் எந்தவிதமான குரூப்பிஸமும் இல்லாமல், தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர் தனது பேட்டியில் உறுதியளித்துள்ளார்.
