சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த சிறுவன் கால்பந்தை ஒரு நொடி கூட தரையில் விழ விடாமல், காற்றில் தொடர்ந்து உதைத்து தனது கால்களால் கட்டுப்படுத்தும் விதம் இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அச்சிறுவனின் அபாரமான பேலன்ஸ் மற்றும் கால் அசைவுகளைக் கண்டு பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, காட்டுத்தீ போல இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 85 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர், மேலும் 7 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதனை ‘லைக்’ செய்துள்ளனர். குறிப்பாக, கால்பந்து ரசிகர்கள் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பகிர்ந்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DZfa1uHzaUS/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோவை விவரிக்கும் நெட்டிசன்கள் அச்சிறுவனை ‘மினி கிறிஸ்டியானோ’ மற்றும் ‘எதிர்கால ரொனால்டோ’ என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். சிலர் இந்த சிறுவனுக்கு ’10 ஆம் எண்’ கொண்ட ஜெர்சி வழங்கப்பட வேண்டும் என்றும், இன்னும் சிலர் நகைச்சுவையாக இவனுக்குப் புகழ்பெற்ற ரொனால்டின்கோ தான் பயிற்சி அளித்திருக்க வேண்டும் என்றும் கமெண்ட் செய்து, அச்சிறுவனை ஒரு சாம்பியனாகக் கொண்டாடி வருகின்றனர்.
