“என் வாழ்க்கையில் முக்கியமான அந்த 2 பேர்” அதில் ஒருவர் இந்தியர்.. ஒருவர் பாகிஸ்தானியர்.. யார் தெரியுமா.? அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நெகிழ்ச்சி..!!

By Soundarya on ஆனி 22, 2026

Spread the love

சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் நடைபெற்ற அமெரிக்கா – ஈரான் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பேசிய சுவாரஸ்யமான கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற இந்த மாநாட்டில், தனது வாழ்க்கையில் மிக முக்கியமான இரு மனிதர்களில் ஒருவர் இந்தியர் என்றும் மற்றொருவர் பாகிஸ்தானியர் என்றும் வான்ஸ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மேலும் பேசுகையில், தனது வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த அந்த இந்தியர் தனது மனைவி உஷா வான்ஸ் என்றும், பாகிஸ்தானியர் அந்நாட்டின் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீர் என்றும் விவரித்தார். கடந்த 3 மாதங்களாகப் போர் நிறுத்தம் தொடர்பாக வேறு எவரையும் விட அசிம் முனீரிடமே தான் தொடர்ச்சியாகப் பேசியதாகக் குறிப்பிட்ட அவர், முனீரின் சிறந்த இராஜதந்திர அறிவும் தலைமைத்துவத் திறன்களும் இல்லையென்றால் இந்த அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமாகியிருக்காது எனப் பாராட்டியுள்ளார்.

   

பல மாதங்களாக நீடித்து வந்த அமெரிக்க-ஈரான் சர்ச்சைக்கு இராஜதந்திர ரீதியான தீர்வு கிடைத்ததற்கு அமெரிக்கா நன்றியுடன் இருப்பதாகத் தெரிவித்த வான்ஸ், மத்திய கிழக்கில் உறவுகளை நம்மால் நிரந்தரமாக மாற்றியமைக்க முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த இராஜதந்திர நகர்வு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.