தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணையும் முக்கிய புள்ளி.. 1 கி.மீ தூரத்திற்கு நின்ற தொண்டர்கள்… மிரண்டு போன அரசியல் களம்….!

By Nanthini on ஆனி 20, 2026

Spread the love

தமிழக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பைச் சந்தித்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி மற்றும் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தவெகவுடன் இணைப்பதற்காக அதன் முன்னாள் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா ஆகிய முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களை இக்கட்சியில் இணைத்துக் கொள்ள வருகை தந்துள்ளனர்.

இவர்களைப் போன்ற முன்னணி அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பு மக்களும் தவெகவில் தங்களை இணைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் ஆவலோடு காத்திருக்கும் காட்சி, தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான அலையை தவெக ஏற்படுத்தியிருப்பதை மிகத் தெளிவாக உணர்த்துகிறது.