அப்படிப்போடு..! மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்வு..? முதல்வர் விஜய் கொடுத்த புது அப்டேட்..!!

By Soundarya on ஆனி 19, 2026

Spread the love

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்த அதிரடி அறிவிப்பை முதலமைச்சர் விஜய் தனது பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியிடுவார் என அரசியல் வட்டாரங்களில் பரவலாகக் கூறப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த புதிய பயனாளிகளைச் சேர்ப்பதற்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்வது குறித்தும் தவெக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. முன்னதாக நடைபெற்ற மகளிர் நலன் துறையினருடனான ஆலோசனைக் கூட்டத்தில், இந்தத் திருத்தங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாகவும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகளிர் மேம்பாட்டிற்கான இந்த முக்கிய அறிவிப்பு மற்றும் புதிய பயனாளிகள் சேர்க்கை குறித்த கூடுதல் தகவல்கள் ஜூன் 22 அன்று முதலமைச்சர் விஜய்யின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் செய்தியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகை உயர்வு மற்றும் தகுதி விதிமுறைகளில் கொண்டு வரப்படும் மாற்றங்கள், தமிழ்நாட்டிலுள்ள லட்சக்கணக்கான குடும்பத் தலைவிகளுக்குப் பெரும் பொருளாதார உதவியாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.