1999 திருமாவின் மாஸ்டர் பிளான்… 2026-ல் கையில் எடுக்கும் ஷாநவாஸ்?…. விசிக-வை அதிரவைக்கும் ‘அந்த’ 2 லட்சம் ஓட்டு ரகசியம்…!

By Nanthini on ஆனி 19, 2026

Spread the love

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆளூர் ஷாநவாஸ் விலகவில்லை என்று அக்கட்சியின் தலைமை திட்டவட்டமாக மறுத்தாலும், அவர் விசிக தலைவர் திருமாவளவனின் அரசியல் பாணியைப் பின்பற்றியே தனது அடுத்தகட்ட நகர்வுகளை ரகசியமாகத் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. கடந்த 1999 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தனித்துப் போட்டியிட்டுப் பெற்ற சுமார் 2 லட்சம் வாக்குகள் தான், அவரைத் தமிழக தேர்தல் அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக மாற்றியதுடன், 2001 ஆம் ஆண்டில் திமுகவின் கூட்டணிக் கதவுகளையும் அவருக்குத் திறந்துவிட்டது.

இதே வரலாற்றுப் பாதையை முன்னுதாரணமாகக் கொண்டு, ஆளூர் ஷாநவாஸும் தனக்கென ஒரு தனித்துவமான வாக்கு வங்கியையும் அரசியல் அடையாளத்தையும் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றும், அதற்கு அவர் தனிக்கட்சி தொடங்குவதே சரியான வழி என்றும் அவருக்கு நெருக்கமானவர்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருவதாகத் தெரிகிறது.