BREAKING: தவெகவில் இணைந்தார்… தமிழக அரசியலில் அடுத்த அணுகுண்டு… பதறிப்போன போயஸ் கார்டன் மற்றும் அறிவாலயம்….!

By Nanthini on ஆனி 18, 2026

Spread the love

தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி.மகேந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் சி.மகேந்திரன் முறைப்படி தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

ஏற்கனவே திமுக, அதிமுக ஆகிய முன்னணி கட்சிகளின் முக்கியப் புள்ளிகள் தவெகவை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், தற்போது நீண்ட கால இடதுசாரி சித்தாந்தப் பின்னணி கொண்ட மூத்த தலைவர் ஒருவரும் தவெகவில் இணைந்திருப்பது, தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான அலை வீசுவதைக் காட்டுவதுடன், அனைத்துத் தரப்பு அரசியல் தலைவர்களின் கவனத்தையும் ஈர்க்கும் முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது.