BREAKING: விஜய் விவாகரத்து.. பரபரப்பு பதிவு… தமிழக அரசியலில் வெடித்தது அடுத்த சர்ச்சை….!

By Nanthini on ஆனி 18, 2026

Spread the love

தனிப்பட்ட வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியைத் தமிழக முதல்வர் விஜய் சந்தித்தது முறையல்ல என்றும், இந்தச் சந்திப்பை அவர் தவிர்த்திருக்கலாம் என்றும் முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இத்தகைய சந்திப்புகள் நீதிமன்றத்தில் நீதிக்காகக் காத்திருக்கும் சாமானிய வழக்குத் தொடுத்தவர்களின் மனநிலையைப் பாதிப்பதோடு, அவர்களிடையே ஒருவித அச்சத்தையும், சந்தேகத்தையும் தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் மீது விவாகரத்து தொடர்பான தனிப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதை ஆதாரமாகக் காட்டி, இந்தச் சந்திப்பு தார்மீக ரீதியாகத் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அப்பாவு தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.