மக்களே உஷார்… இன்னும் 2 வாரம்தான் கெடு… இந்த ஒரு வேலையை செய்யாவிட்டால் சிலிண்டர் மானியம் கட்… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!

By Swetha on ஆனி 18, 2026

Spread the love

இண்டேன் நிறுவனத்தின் சமையல் சிலிண்டர் நுகர்வோர் தங்களின் அரசு மானியத் தொகையைத் தொடர்ந்து தடையின்றிப் பெறுவதற்கு, ஜூன் 30ஆம் தேதிக்குள் இ-கேஒய்சி மற்றும் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போலி இணைப்புகளைத் தடுத்து, சரியான பயனாளிகளுக்கு மானியம் நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்யவும், விநியோக முறையை மேம்படுத்தவும் இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தச் செயல்முறை முற்றிலும் இலவசமானது என்பதால் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் இந்தச் சரிபார்ப்பை எளிதாக முடிக்க இந்தியன் ஆயில் ஒன் என்ற மொபைல் செயலியைப் பயன்படுத்தலாம். செயலியைப் பதிவிறக்கம் செய்து, உள்நுழைந்த பிறகு, சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி ஆதார் அடிப்படையிலான முடிக்க முடியும். ஸ்மார்ட்போன் பயன்படுத்த விரும்பாதவர்கள், தங்களின் இண்டேன் எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது வீட்டிற்கு சிலிண்டர் விநியோகம் செய்ய வரும் ஊழியர் மூலமாகவோ பயோமெட்ரிக் கைரேகை அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஆஃப்லைன் முறையில் இ-கேஒய்சி-ஐ செய்துகொள்ளலாம்.

   

இந்தச் சரிபார்ப்பு செயல்முறையை முடிப்பதில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது சிரமங்கள் இருந்தால், வாடிக்கையாளர்கள் உதவி பெற 1800 2333 555 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்கலாம். ஜூன் 30ஆம் தேதி என்ற காலக்கெடுவிற்குள் இ-கேஒய்சி பணிகளை முடிக்கத் தவறினால் எதிர்காலத்தில் சிலிண்டர் மானியத் தொகை வங்கிக் கணக்கில் வருவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால், நுகர்வோர் உடனே இதை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.