தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முந்தைய அரசின் முக்கியத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக ‘TN SKILL’ என மாற்றப்பட்டுள்ளது. இதற்கேற்ப, இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக ஊடகத் தளப் பக்கத்தின் பெயர் மாற்றப்பட்டதோடு, நான் முதல்வன் திட்டம் தொடர்பாக முந்தைய ஆட்சியில் பதிவிடப்பட்ட பழைய பதிவுகள் மற்றும் வீடியோக்களும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
புதிய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம், சமூக ஊடகப் பக்கங்களில் இருந்த பழைய அடையாளங்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிப்பு செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசியல் மற்றும் நிர்வாக மாற்றங்களின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் ரீபிராண்டிங் (Digital Rebranding) நடவடிக்கைகள் தற்போது அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதங்களை கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
