“தைரியம் இருந்தா அடிச்சிப்பாருடா” யாருப்பா இந்த வோசின்யா..? ஸ்பெயினையே அலறவிட்ட 40 வயது கோல்கீப்பர்.. ஒரே நாளில் 6 மில்லியன் ஃபாலோயர்ஸ்..!!

By Soundarya on ஆனி 17, 2026

Spread the love

2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியின் அதிரடி ஆட்டத்தை ஒற்றை ஆளாகத் தடுத்து நிறுத்தி, 40 வயதான கேப் வெர்டே தீவு நாட்டின் கோல்கீப்பர் வோசின்யா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்காவின் சிறிய நாடான கேப் வெர்டே அணிக்கும், அதன் கோல்கீப்பரான வோசின்யாவுக்கும் இதுவே முதல் உலகக்கோப்பை போட்டியாகும். இந்த அறிமுக போட்டியிலேயே உலகமே வியக்கும் வண்ணம், ஸ்பெயின் அணியின் 7 கோல் வாய்ப்புகளை வோசின்யா மிக லாவகமாகத் தடுத்து ஆட்டத்தைச் சமனில் முடித்து வைத்தார்.

தன்னுடைய 25 வயதில் கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கி, சிறிய அளவிலான போட்டிகளில் விளையாடி வந்த வோசின்யா, இன்று உலகக்கோப்பையில் ஸ்பெயின் போன்ற பெரிய அணிக்குச் சிம்ம சொப்பனமாக மாறியுள்ளார். இந்த அசத்தல் சம்பவத்திற்குப் பிறகு, 40,000 ஆக இருந்த இவருடைய இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை ஒரே நாளில் 6 மில்லியனாக எகிறியுள்ளது. போட்டி முடிந்த பின்னர், தான் கடந்து வந்த கரடுமுரடான பாதையையும் கஷ்டங்களையும் நினைத்து மைதானத்திலேயே அவர் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

   

கால்பந்து விளையாட்டில் வயது என்பது வெறும் எண்தான் என்பதை நிரூபித்துள்ள வோசின்ஹாவின் இந்த அசாத்திய திறமையால் கேப் வெர்டே நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாகக் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர். சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களுக்குப் பெரும் உத்வேகமாக மாறியுள்ள இவருக்கு உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.