அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் அரசியல் நகர்வுகள் குறித்த தகவல், தற்போது தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரைத் தன்வசம் இழுக்க திமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஒருவர் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் மூலம் மத்திய மாவட்டங்களில் திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்த அக்கட்சியின் தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே வேளையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தரப்பும் அவரை தங்கள் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், சி.விஜயபாஸ்கரின் முதல் சாய்ஸ் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தான் என்று அரசியல் வட்டார விவரம் தெரிந்தவர்கள் ஆணித்தரமாகக் கூறி வருவது, இந்த விவகாரத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
