தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், தவெக ஆட்சியில் பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் பேரவையில் வெளியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஊடகப் பேட்டி ஒன்றில் பேசிய அமைச்சர் வன்னிஅரசு, உரிமைத் தொகை உயர்வு தொடர்பான முக்கியத் தகவல் ஜூன் 18-ஆம் தேதி (நாளை) தெரியவரும் எனச் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே தவெக ஆட்சியில் இரண்டு முறை தலா ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
