காலையிலேயே பரபரப்பு…. திமுக கூட்டணிக்கு குட் பை.. ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

By Nanthini on ஆனி 17, 2026

Spread the love

தமிழக அரசியலில் நீண்ட காலமாக நீடித்து வரும் திமுக – மதிமுக கூட்டணி விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் திமுகவுடன் இணக்கமாகச் செயல்பட்டு வந்த மதிமுக, தற்போது அந்த கூட்டணிக்கு ‘குட் பை’ சொல்லத் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான இறுதி முடிவினை, வரும் ஜூன் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ முறைப்படி அறிவிக்க உள்ளார் எனத் தெரிகிறது. சமீபகாலமாக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைந்த பிறகு, அதன் தலைவர் விஜய்க்கு ஆதரவாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தொடர்ந்து பேசி வருவது இந்த அரசியல் மாற்றத்திற்கான முக்கிய அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில், ஜூன் 27 பொதுக்குழுவின் முடிவு தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.