அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி திமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி அரசியல் நகர்வுகள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியை வழக்கம் போல் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியதால் அதிருப்தியடைந்த முன்னாள் மாவட்ட செயலாளரின் மகன் உதயம் சரண், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் முகமது பர்வேஸுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்.
இந்த அதிரடி ஆதரவால் முகமது பர்வேஸ் தேர்தலில் அபார வெற்றி பெற்றதோடு, தற்போது அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். இத்தகையதொரு அரசியல் சூழ்நிலையில், தவெக வேட்பாளரின் வெற்றிக்குத் தீவிரமாக உழைத்த அதே திமுகவினர், தற்போது திமுகவின் அதிகாரப்பூர்வ ‘GenZ’ இளைஞர் பாசறை கூட்டத்தில் எவ்வித தயக்கமும் இன்றி கலந்துகொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
