“வெறும் 6 மாத்திரைக்கு ரூ.95,000″…. அமெரிக்க மருத்துவ உலகை அலறவிட்ட இந்திய மாத்திரை… மிரண்டுபோன வெள்ளைக்காரி வெளியிட்ட வீடியோ…!

By Nanthini on ஆனி 16, 2026

Spread the love

அமெரிக்காவில் மருத்துவச் செலவுகளும், மருந்துகளின் விலையும் விண்ணைத் தொடும் அளவிற்கு இருப்பது உலகறிந்த உண்மை. இதற்குப் புதிய சான்றாக, அமெரிக்காவைச் சேர்ந்த விக்டோரியா என்ற பெண் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனக்குத் தேவையான வெறும் 6 மாத்திரைகளுக்கு அமெரிக்காவில் இந்திய மதிப்பில் சுமார் 95,000 ரூபாய் கேட்கப்பட்டதாகவும், அந்த மருத்துவச் செலவை ஏற்க காப்பீட்டு நிறுவனம் மறுத்துவிட்டதாகவும் அவர் அதில் வேதனையோடு பகிர்ந்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அவர் கனடாவில் உள்ள ஒரு மருந்தகம் மூலமாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதே வீரியம் கொண்ட மாத்திரைகளை வெறும் 2,300 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அமெரிக்காவின் மருத்துவக் காப்பீடு மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு என்பது மக்களை ஏமாற்றும் ஒரு மிகப்பெரிய ‘ஸ்கேம்’ என்று மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விக்டோரியாவின் இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவியதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மோசமான மருத்துவக் காப்பீட்டு முறைகள் குறித்தும், அங்குள்ள சாமானிய மக்களின் மருத்துவ அவதி குறித்தும் உலகளவில் பலத்த விவாதங்கள் எழுந்துள்ளன. எந்தவொரு பொருளாக இருந்தாலும் வெளிநாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் அதன் விலை குறைவாகவே இருக்கும் என்பதற்கு இந்த நிகழ்வும் ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. உலகத் தரத்திலான மருந்துகளை, ஏழை எளிய மக்களும் வாங்கும் வகையில் மிகக் குறைந்த விலையில் தயாரித்து வழங்கும் இந்தியாவின் மருந்துத் துறையையும் (Pharma Industry), அதன் உன்னதமான சேவையையும் உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் தற்போது பாராட்டிப் போற்றி வருகின்றனர்.