தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, மக்கள் நலனை முன்னிறுத்திப் பல்வேறு முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை மேம்படுத்தப் பல்வேறு முக்கிய நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் பயிலும் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக இந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் பலனை மேலும் பல மாணவர்கள் பெறும் வகையில், இனி 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கும் இது விரிவாக்கம் செய்யப்படும் எனப் புதிய அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்தத் திட்ட விரிவாக்கமானது, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். நடுநிலைப் பள்ளி மாணவர்களின் பசியைப் போக்கி அவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை முதலமைச்சர் விஜய் தற்போது அடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இம்மாபெரும் அறிவிப்பு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
