பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி.சம்பத், தற்போது அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அண்ணாமலையின் ‘We the Leaders’ இயக்கம் மிகச் சிறப்பான வளர்ச்சியை எட்டும் என்றும், வரும் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணாமலை புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்க உள்ளதாகவும் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் கோரிக்கையை ஏற்று, திமுகவிற்கு ‘உதயசூரியன்’ சின்னத்தைப் பெற்றுக் கொடுத்த முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமியின் மகன் தான் இந்த ஏ.ஜி.சம்பத் என்பது தமிழக அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு பின்னணியாகும்.
