தமிழகத்தில் முதற்கட்டமாக மூடப்பட்ட 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளின் முழுமையான விவரப் பட்டியலைத் தமிழக அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முன்னதாக மூடப்பட்ட கடைகளின் விவரங்கள் சரியாக வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்த நிலையில், தற்போது மண்டல வாரியாக மூடப்பட்ட கடைகளின் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காகப் பகிரப்பட்டுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பு குடிமகன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வப் பட்டியலின்படி, அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் மட்டும் 290 டாஸ்மாக் கடைகளும், கோவை மண்டலத்தில் 179 கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து திருச்சி மண்டலத்தில் 84 கடைகளும், சேலம் மற்றும் சென்னை மண்டலங்களில் தலா 82 கடைகளும் என மொத்தம் 717 கடைகள் முழுமையாக மூடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
