“ஸ்டாலினையே மிரள வைத்த அந்த டிராலி”.. தோல்விக்கான உண்மையான காரணம்… கள ஆய்வு அறிக்கையில் அதிர்ந்து போன அறிவாலயம்…!

By Nanthini on ஆனி 13, 2026

Spread the love

சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவை அடிமட்ட அளவில் மறுசீரமைக்கும் பணிகளில் அக்கட்சியின் தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் திமுகவின் வாக்கு வங்கி சரிந்ததற்கான உண்மையான காரணங்கள் மற்றும் உடன்பிறப்புகளின் குமுறல்களைக் கண்டறியும் நோக்கில் கட்சித் தலைமையால் ‘கள ஆய்வுக் குழு’ அமைக்கப்பட்டிருந்தது. தேர்தல் களத்தில் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்ட அதிருப்திகளை நேரடியாகக் கேட்டு, கட்சியைப் பலப்படுத்துவதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாக இருந்தது.

   

அதன்படி, கடந்த நான்கு நாட்களாகக் கள ஆய்வின் போது பெறப்பட்ட புகார்கள் மற்றும் கருத்துக்களைக் குழுவினர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துச் சமர்ப்பித்து வருகின்றனர். இக்குழுவில் சிவகங்கை, புதுக்கோட்டை தெற்கு, மதுரை மாநகர், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளுக்கு எஸ். ஜோயல் மற்றும் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தங்களது தீவிரக் கள ஆய்வின் மூலம் சேகரிக்கப்பட்ட விவரங்களை இறுதி அறிக்கையாகத் தயார் செய்தனர்.

   

இந்த நிலையில், தங்களது கள ஆய்வு அறிக்கையை சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அவர்கள் சமர்ப்பித்தனர். அப்போது எடுக்கப்பட்ட ஒரு சுவாரசியமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் திமுகவினர் மத்தியில் படுவேகமாக டிரெண்டாகி வருகிறது. வழக்கமாக அரசியல் கட்சிகளின் ஆய்வுக் குழுவினர் தங்களது அறிக்கைகளை ஒரு சில கோப்புகளாகவோ (Files) அல்லது புத்தகங்களாகவோ தான் சமர்ப்பிப்பார்கள். ஆனால், திமுகவின் இந்த ஆய்வுக் குழுவினர் சமர்ப்பித்த விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

அடிமட்டத் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான புகார் கடிதங்கள் மற்றும் கருத்துக்களைத் தொகுத்து, அவற்றை ஒரு பெரிய டிராலியில் (Trolley) தள்ளிக் கொண்டு வந்து ஸ்டாலினின் அறையில் எஸ். ஜோயல் மற்றும் எ.வ.வே. கம்பன் ஆகியோர் சமர்ப்பித்தனர். இந்த டிராலி நிறைய இருக்கும் புகார்களைத் தலைமை முழுமையாக வாசித்து, அதற்கேற்ப விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், எந்தெந்த மாவட்டச் செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்படப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.