“13 நாட்கள் பேசாதது குற்றமல்ல” கணவன்-மனைவிக்குள் மௌனம் இயல்பானது.. கணவரை குற்றவாளி என அறிவித்த தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்..!!

By Soundarya on ஆனி 13, 2026

Spread the love

கோவையைச் சேர்ந்த ஜெயேஷ் கண்ணா என்பவருக்கு எதிரான வழக்கில், உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியத்துவமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. தனது மனைவியுடன் அவர் 13 நாட்கள் பேசாமல் இருந்ததையே ஒரு பெரிய மனரீதியான கொடுமையாகக் கருதி, அவருக்கு எதிராகக் கீழ் நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட குற்றவியல் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. இந்த வழக்கில் ஜெயேஷ் கண்ணாவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் போதிய மற்றும் வலுவான ஆதாரங்கள் இல்லை என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுவித்து உத்தரவிட்டனர்.

கணவன்-மனைவி இடையேயான திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதும், அதன் காரணமாகச் சில காலம் பேச்ச வார்த்தை இல்லாமல் இருப்பதும் (உரையாடல் இடைவேளை) மிகவும் இயல்பான ஒன்று என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இத்தகைய தற்காலிக மௌனத்தையோ அல்லது பிரிவையோ மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, அதை ஒரு கணவன் தன் மனைவிக்கு இழைக்கும் குற்றவியல் ரீதியிலான கொடுமையாகக் கருத முடியாது என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்தத் தீர்ப்பு தம்பதியினருக்கு இடையிலான இயல்பான குடும்பப் பிரச்சினைகளைக் குற்றவியல் வழக்குகளாக மாற்றுவதைத் தடுக்கும் நோக்கில் அமைந்துள்ளது.