சமூக ஊடகங்களில் தந்தை ஒருவர் தனது மகளுடன் விளையாடும் வீடியோவை பகிர்ந்ததைத் தொடர்ந்து, அது பலத்த விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது. அந்த வீடியோவில் மகள் போன் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அப்போது தந்தை மகளின் கன்னத்தில் முத்தமிட்டு விளையாடினார். இதனை பார்த்த இணையவாசிகளில் ஒரு தரப்பினர், இதனை தந்தை மற்றும் மகளுக்கு இடையேயான ஒரு சாதாரண, கள்ளங்கபடமற்ற பாசப் பகிர்வாகவே பார்க்கின்றனர்; மேலும், ஒரு தாயும் மகளும் இதுபோன்று விளையாடினால் விமர்சிக்காத சமூகம், தந்தை என்று வரும்போது இரட்டை நிலாப்பாட்டோடு அணுகுவதாக அவர்கள் வாதிடுகின்றனர். எனினும், மற்றொரு தரப்பினர் அந்த வீடியோவில் உள்ள சில காட்சிகள் பார்ப்பதற்கு உகந்ததாக இல்லை என்றும், தற்காலச் சூழலில் இத்தகைய பதிவுகள் தேவையற்றவை என்றும் தங்களது கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
A father has come under heavy scrutiny online after sharing a video of himself playing with his daughter.
While some people view it as an innocent father-daughter interaction and argue the criticism reflects double standards, others feel the footage was inappropriate.
What’s… pic.twitter.com/hZbV72n5tp— BlueDox (@RueMazh) June 10, 2026
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, ஒரு தந்தையின் தூய்மையான அன்பை நாம் சந்தேகிக்க வேண்டியதில்லை என்றாலும், டிஜிட்டல் உலகில் எதை பொதுவெளியில் பகிர வேண்டும் என்பதில் அதிகக் கவனம் தேவைப்படுகிறது. குழந்தைகள் சம்பந்தப்பட்ட பதிவுகள் இணையத்தில் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய ஆபத்துகள் இன்று அதிகமாக உள்ளதால், பெற்றோர்கள் தங்கள் தனிப்பட்ட மகிழ்ச்சியான தருணங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிடுவதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. எனவே, இந்த விஷயத்தில் விமர்சனங்களை மட்டுமே முன்னிறுத்தாமல், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வதே தற்போதைய அவசியமான தேவையாகும்.
