திமுகவிற்கு ஷாக் கொடுத்த துரை வைகோ… தவெக உடன் மதிமுக கூட்டணி… உள்ளாட்சி தேர்தல் க்ளைமாக்ஸ்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஆனி 11, 2026

Spread the love

தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது குறித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் மதிமுக திமுக கூட்டணியில் இருந்தே தொடர்வதாகவும், அதிலிருந்து தவாக வெளியேறவில்லை என்றும் தெளிவுபடுத்திய அவர், எனினும் உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக-வுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து கட்சிக்குள் விரிவாக விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அத்தோடு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக நலன் சார்ந்த விஷயங்கள் குறித்தும் பேசிய துரை வைகோ, கடந்த ஆட்சிக் காலத்தில் நிலவிய போதைப்பொருள் நடமாட்டம், தற்போதைய திமுக ஆட்சியிலும் தொடர்ந்து நீடித்து வருவதாகக் கூறி தனது கவலையையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.