BREAKING: இணைகிறார்.. அண்ணாமலை வலையில் விழுந்த ‘அந்த’ சிங்கம்… இரவில் வந்த அரசியல் திருப்பம்….!

By Nanthini on ஆனி 11, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய நகர்வாக, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘We The Leaders’ இயக்கத்தில் முன்னாள் டி.ஜி.பி ஏ.கே. விஸ்வநாதன் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவையைச் சேர்ந்தவரான இவர், தமிழக காவல்துறையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் உட்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி கடந்த 2024-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக அரசியல் கட்சியினர் மட்டுமே இணையும் ஒரு இயக்கத்தில், மக்கள் மத்தியில் நல்ல நற்பெயரைக் கொண்டுள்ள ஒரு மூத்த ஐ.பி.எஸ் (IPS) அதிகாரி இணையவிருப்பது, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.