மக்களே அவங்களை ஓட விடுவாங்க..! தவெக- வை கிழித்துத் தொங்கவிட்ட.. திமுக முன்னாள் அமைச்சர்..! பின்னணி என்ன…? தமிழக அரசியலில் பரபரப்பு…!!

By Swetha on ஆனி 10, 2026

Spread the love

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் அதன் திட்டங்களை முன்னாள் திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் குழந்தைகளுக்கு மோதிரம் போன்ற தவெக-வின் தேர்தல் வாக்குறுதிகள் நடைமுறைக்குச் சாத்தியமற்றவை என்று சாடினார். தமிழகத்தின் மொத்த வருமானமே ரூ.4.65 லட்சம் கோடி தான் எனும் நிலையில், இத்திட்டங்களுக்கு மட்டும் ரூ.12 லட்சம் கோடி தேவைப்படும் எனக் குறிப்பிட்ட அவர், “இதற்கான பணத்தை விஜய் தனது வீட்டில் இருந்தா கொண்டு வருவார்?” என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

தவெக அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கேலி செய்த அன்பரசன், அமைச்சர்களுக்குத் தங்கள் துறை சார்ந்த புரிதல் இல்லை என்றும், கோயில் வளாகங்களில் ஆய்வு நடத்தும் முறைகள் முதிர்ச்சியற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். தற்போதைய தவெக ஆட்சியை “கேடுகெட்ட ஆட்சி” என வர்ணித்த அவர், மக்கள் “மெண்டல்களிடம்” மாட்டிக்கொண்டு தவிப்பதாக விமர்சித்தார். மேலும், திமுக தனது தொகுதிகளுக்குச் செய்த நன்மைகளை மக்கள் மறந்துவிட்டதாக ஆதங்கம் தெரிவித்த அவர், தவெக எம்.எல்.ஏ-க்களைத் தேர்வு செய்த மக்களே விரைவில் அவர்களை விரட்டியடிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

   

எதிர்க்கட்சியான அதிமுக குறித்தும் தனது விமர்சனங்களை முன்வைத்த அவர், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் தவெக அலுவலக வாசலில் காத்திருப்பது பரிதாபத்திற்குரியது என்றார். “திமுக இந்த அரசை அப்படியே விட்டுவிடாது; இன்னும் ஆறு மாதங்களில் உங்கள் கதையை முடிக்கிறோம்” என எச்சரிக்கை விடுத்த அன்பரசன், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தீவிரமாகப் பணியாற்றி எதிரிகளை வீழ்த்தும் என சூளுரைத்தார். இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.