BREAKING: தவெகவில் இணையவில்லை.. கடைசி நேர அரசியல் திருப்பம்… செம குஷியில் எடப்பாடி…!

By Nanthini on ஆனி 9, 2026

Spread the love

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, சாத்தூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை (EPS) நேரில் சந்தித்து பேசியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதி கூட்டணி கட்சித் தலைவரான நயினார் நாகேந்திரனுக்கு ஒதுக்கப்பட்டதால், திருச்சுழி தொகுதியில் போட்டியிட்டு ராஜவர்மன் தோல்வியடைந்தார்.

இதனால் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த அவர், அண்மையில் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. இந்நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியை அவர் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளதன் மூலம், தான் தவெக-வில் இணையப் போவதாக வெளியான அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதோடு, தான் என்றும் அதிமுக-விலேயே நீடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.