ஆதவ் அர்ஜுனா மீது அவதூறுகளை பரப்பும் திமுக… இனி இதுதான் நடக்கும்.. TVK ஐடி விங் எச்சரிக்கை…!!

By Soundarya on ஆனி 9, 2026

Spread the love

விசிக துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான மற்றும் பொய்யான செய்திகளைப் பரப்பி வரும் திமுகவினர் மீது விரைவில் சட்டரீதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் அதிரடி பதிலடி கொடுத்துள்ளது. சமீபத்திய போதைப்பொருள் கடத்தல் விவகாரத்துடன் ஆதவ் அர்ஜுனாவின் பெயரைத் தொடர்புபடுத்தி திமுகவினர் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ள தவெக, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இத்தகைய அநாகரிகமான அரசியல் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், திமுகவின் இத்தகைய தொடர்ச்சியான பொய்ப் பிரச்சாரங்களையும், அவதூறுகளையும் கண்டே தமிழக மக்கள் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அவர்களுக்குத் தக்க பாடத்தைப் புகட்டியுள்ளனர் என்றும் தவெக ஐடி விங் தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளது. தோல்வி பயத்தால் தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களைக் குறிவைத்து திமுகவினர் பரப்பும் எந்தவொரு பொய்யுரைகளும் மக்களிடம் இனி செல்லுபடியாகாது என்றும், பொய்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அரசியல் நடத்துவோருக்கு எதிராகத் தங்களின் சட்டப் போராட்டம் தொடரும் என்றும் தவெக ஐடி விங் எச்சரித்துள்ளது.