பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு எவ்வித தடையுமின்றி பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கூட்டுறவுத் துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 20 முதல் 30-ம் தேதிகளுக்குள் கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு பொருள்கள் கொண்டு செல்லப்படும் நடைமுறை மாற்றப்பட்டு, இனிவரும் காலங்களில் அடுத்த மாதத்திற்கான பொருள்கள் நடப்பு மாதத்தின் 15-ம் தேதி முதலே ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு மாத இறுதியில் பொருள்கள் நகர்த்தப்பட்டதால், பொதுமக்கள் ஒரே தவணையில் அனைத்துப் பொருள்களையும் வாங்க முடியாமல் சிரமப்பட்டு வந்த நிலையில், தற்போதைய இந்த முன்கூட்டிய நடவடிக்கை மூலம் விநியோகத் தட்டுப்பாடு நீங்கி, பொதுமக்கள் தங்களுக்குரிய ரேஷன் பொருள்களை எவ்வித தாமதமுமின்றி தங்கு தடையின்றி ஒரே முறையில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
