“மர நாற்காலி டூ பிரீமியம் குஷன் சேர்!.. முதலமைச்சர் விஜய்யின் நாற்காலி திடீரென மாற்றம் செய்யப்பட்டது ஏன்?.. பின்னணியில் இருக்கும் ரகசியம்..!!

By Muthu Mani on ஆனி 9, 2026

Spread the love

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய், அரசியல்வாதிகளின் வழக்கமான வேட்டி-சட்டை கலாசாரத்தை மாற்றி, கருப்பு நிற கோட் மற்றும் வெள்ளைச் சட்டையுடன் தினமும் காலை 9.30 மணிக்கெல்லாம் தலைமைச் செயலகம் வந்து பணிகளை கவனித்து வருகிறார். மதிய உணவிற்குக்கூட வீட்டிற்குச் செல்லாமல், கொண்டு வரும் உணவையே உட்கொண்டு பணிபுரிந்து வருகிறார். தொடக்கத்தில் தலைமைச் செயலகத்தில் வெள்ளை துண்டு போடப்பட்ட நாற்காலியிலும், பின்னர் வெறும் மர நாற்காலியிலும் அமர்ந்து அவர் கோப்புகளைப் பரிசீலித்து வந்தார்.

இந்த நிலையில், முதல்வர் விஜய் அமர்ந்து வந்த மர நாற்காலி தற்போது மாற்றப்பட்டு, அதிநவீன குஷன் வசதி கொண்ட பிரீமியம் சொகுசு நாற்காலி (Premium Chair) அவரது அறையில் போடப்பட்டுள்ளது. மர நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வதால் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டதன் காரணமாகவே, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த நாற்காலி கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ள இந்த அதிநவீன நாற்காலியின் விலை சுமார் ரூ.55,000 முதல் ரூ.80,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

   

சமீபத்தில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவும் தனது அறையில் ரூ.80,000 மதிப்பிலான ‘ரெட் ஓக் இம்பீரியோ’ வகை சொகுசு நாற்காலியை மாற்றியது பெரும் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது தமிழக முதலமைச்சர் விஜய்யும் தனது உடல்நலன் மற்றும் பணி வசதிக்காக இத்தகைய பிரீமியம் நாற்காலிக்கு மாறியிருப்பது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் தற்போதைய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.