ஈவு இரக்கமே இல்லையா..? 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து… கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு.. ரோட்டில் வீசிச்சென்ற கும்பல்… அதிர்ச்சி..!!

By Swetha on ஆனி 8, 2026

Spread the love

மேற்கு வங்க மாநிலத்தில் 8-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், ஒரு கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பயங்கரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த சனிக்கிழமை மதியம் 1:30 மணியளவில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமான சிம்ரன் தமாங் என்ற பெண் அந்தச் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அவர்கள் பயணித்த காரிலேயே சிறுமிக்குத் தெரியாமல், அவர் குடித்த குளிர்பானத்தில் மயக்க மருந்து மற்றும் மதுவைக் கலந்து கொடுத்துள்ளனர். அதனைப் பருகிய சிறுமி, சிறிது நேரத்தில் தன் சுயநினைவை இழந்துள்ளார். அதன் பின்னர், அந்தக் கும்பல் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

   

கொடுமையின் உச்சமாக, சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில் பாதிக்கப்பட்ட சிறுமியைச் சாலையோரம் வீசிவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. பின்னர், அங்கு வந்த சிலர் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறுமியின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.