உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், மருமகன் ஒருவர் தனது சொந்த மாமியாரையே முறைப்படி திருமணம் செய்து, அதைப் பதிவு செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இவர்கள் இருவருக்குள்ளும் ரகசியக் காதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், அந்த நபர் தனது மனைவியை முறைப்படி பிரிந்துவிட்டு, தற்போது மாமியாரைத் திருமணம் செய்துகொண்டு, அதற்கான திருமணப் பதிவுச் சான்றிதழுடன் சமூக வலைத்தளங்களில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ காட்டுத்தீ போலப் பரவி பலரது மத்தியிலும் கடும் விவாதங்களையும் விமரிசனங்களையும் கிளப்பியுள்ளது. குடும்ப உறவுகளின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்துள்ளதாகப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். எனினும், இந்த விசித்திரத் திருமணம் தொடர்பாக இதுவரை காவல் துறையினருக்கு எந்தவிதமான புகாரும் வரவில்லை என்றும், இதனால் அவர்கள் தரப்பில் இதுவரை எந்தவித சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
