உதயநிதியை ராஜினாமா செய்ய சொல்லுங்க.. அடுத்த 24 மணி நேரத்துல நான் ராஜினாமா பண்ணுறேன்… சீமான் பேச்சுக்கு காங்கிரஸ் பதில்..!!

By Soundarya on ஆனி 7, 2026

Spread the love

திமுகவின் வாக்குகளைப் பெற்றுத்தான் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றது, ஆனால் தற்போது அவர்கள் தவெக கூட்டணிக்குச் சென்றுவிட்டனர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக கூட்டணிக்குச் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர்கள், தங்களது தற்போதைய பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைய வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். காங்கிரஸ் மற்றும் தவெக இடையேயான தற்போதைய அரசியல் நகர்வுகளைச் சுட்டிக்காட்டி சீமான் முன்வைத்துள்ள இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீமானின் இந்த விமர்சனத்திற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சியின் வாக்குகளைப் பெற்றுத்தான் உதயநிதி ஸ்டாலின் தற்போது எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “உங்களது தம்பி உதயநிதியை முதலில் அவரது பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்; அவர் ராஜினாமா செய்த அடுத்த 24 மணி நேரத்தில் நானும் எனது எம்பி பதவிகான ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கிறேன்” என்று சீமானுக்கு அவர் அதிரடியாக எதிர்ச் சவால் விடுத்துள்ளார். இரு தலைவர்களின் இந்த பரஸ்பர சவால்கள் தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.