MGR-க்கு ஜெயலலிதா.. தலைவர் விஜய்க்கு திரிஷா… தவெக-வில் இணைய த்ரிஷாவுக்கு அழைப்பு… சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு…!!

By Soundarya on ஆனி 7, 2026

Spread the love

நடிகை த்ரிஷாவை அரசியலுக்கு அழைத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த போஸ்டரில், அன்றும் இன்றும் என இருவேறு காலகட்டங்களை ஒப்பிட்டு, “எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஜெயலலிதா.. தலைவர் விஜய் அவர்களுக்கு த்ரிஷா.. என மீண்டும் வரலாறு எழுதப்படுகிறது…!” என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் நகரின் முக்கிய இடங்களில் பரவலாகக் காணப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.

மேலும், அந்த போஸ்டரில் “தலைவரை ரசிக்கப் பலர் இருப்பார்கள்… ஆனால் தலைவரை உயிராய்க் காக்க வரலாற்றில் நிற்பவர்கள் நீங்கள் ஒருவரே…!” எனக் குறிப்பிட்டு, எங்கள் தலைமையையும் தலைவரையும் காக்க கழகப் பணியாற்ற வருக வருக என த்ரிஷாவுக்கு உரிமையோடு தவெகவினர் அழைப்பு விடுத்துள்ளனர். விஜய் மற்றும் த்ரிஷா இருவரின் புகைப்படங்களுடன் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் மற்றும் அது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிவேகமாகப் பரவி வருகின்றன.