உங்க மண்டையில ஏதாவது இருக்கா..? முதலமைச்சர் விஜய்யின் தொகுதியில்.. மேயர் பிரியா அதிரடி ஆவேசம்…!!

By Soundarya on ஆனி 7, 2026

Spread the love

சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, தமிழக முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தவெக ஆட்சியை நோக்கி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்து இத்தனை நாட்களாகியும் மக்கள் நலனுக்காக எந்தவொரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும், தற்போதைய ஆட்சி வெறும் ‘ஸ்டிக்கர் ஆட்சி’ மற்றும் ‘சோஃபா ஆட்சி’யாக மட்டுமே நடந்து வருகிறது என்றும் அவர் சாடியுள்ளார். தங்களின் நிர்வாகத் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல், எல்லாவற்றிற்கும் திமுகதான் காரணம் என்று தவெக அரசு பழிசுமத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவில்லை என்றும், தவெக அரசு என்ன செய்யப் போகிறது என்பதை விளக்கவில்லை என்றும் மேயர் பிரியா குறிப்பிட்டுள்ளார். ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளே தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்ததை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், சினிமா என்பது வேறு, அரசியல் என்பது வேறு என்று குறிப்பிட்ட அவர், “அரசியல் ஒன்றும் 3 மணி நேரப் படத்தை பார்த்துவிட்டு ரிவ்யூ கொடுப்பது போன்றதல்ல; இது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை” என்று முதல்வர் விஜய்யின் அரசியல் அணுகுமுறையை விமர்சித்தார்.

   

திமுக குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் தவெக-வின் ‘விர்ச்சுவர் வாரியர்ஸ்’ அமைப்பை நோக்கி, “திமுகவை விமர்சித்து கன்டென்ட் போடுகிறீர்களே, அது உண்மையா பொய்யா என்று பார்க்க மாட்டீர்களா, உங்கள் மண்டையில் ஏதாவது இருக்கிறதா?” என மேயர் பிரியா மிகக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். வெறும் சமூக ஊடகங்களை மட்டுமே நம்பி அரசியல் செய்யும் இந்த தற்குறி கூட்டத்திற்குப் பின்னால் செல்லாமல், திமுக என்றும் மக்களுடனேயே இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துப் பேசியுள்ளார்.