விஜய்க்கு அப்புறம் அண்ணாமலையா?… நிமிடத்திற்கு 35 பேர் சேர்க்கை… தமிழக அரசியலில் அடுத்த ‘மாஸ்’ மொமென்ட்…. இரண்டே நாளில் தரமான சம்பவம்….!

By Nanthini on ஆனி 7, 2026

Spread the love

தமிழக பா.ஜ.க-வின் தலைவராக இருந்து வந்த கே. அண்ணாமலை, தனது பதவியையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துவிட்டு, “We The Leaders” என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். டெல்லி பா.ஜ.க தலைமை திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் காட்டிய ஆர்வமே, அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் கொள்கைகளை முன்னிறுத்தி, தமிழ் அடையாளத்துடன் கூடிய சுயசார்பு அரசியலை நோக்கி அண்ணாமலை எடுத்துள்ள இந்த முடிவு, தமிழக அரசியலில் ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

அண்ணாமலையின் இந்த வெளியேற்றம் தமிழக பா.ஜ.க-விற்குள் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அரசியல் நிலநடுக்கத்தை உருவாக்கியுள்ளது. கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன், பெரம்பலூர் மாவட்ட பொதுச் செயலாளர் உமா ஹைமாவதி செல்வராஜ் மற்றும் மாநில இளைஞரணி சட்டப் பிரிவு அமைப்பாளர் அபிலாஷ் கோபிநாத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது பதவிகளைத் துறந்து அண்ணாமலையுடன் இணைந்துள்ளனர். இவர்களோடு பல்லாயிரக்கணக்கான அடிமட்டத் தொண்டர்களும், சமூக ஊடகப் பிரிவினரும் பா.ஜ.க-விலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறி வருவதால் கட்சியின் கட்டமைப்பு முற்றிலும் சிதையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

   

புதிதாகத் தொடங்கப்பட்ட “We The Leaders” இயக்கத்தின் டிஜிட்டல் தளம், ஆரம்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பொதுமக்களிடம் இருந்து அசுரத்தனமான வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்கம் தொடங்கிய வெறும் 24 மணி நேரத்திற்குள் 17 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளனர். அரசியல் ஆய்வாளர்களின் கணிப்புப்படி, திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ.க-வை ஆதரித்த தீவிர ஆதரவாளர்கள் மற்றும் இளைஞர்களில் சுமார் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் தற்போது அண்ணாமலையின் பின்னால் அணிவகுக்கத் தொடங்கியுள்ளனர்.

 

‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க-விற்குப் புதிய முகவரியைத் தந்த அண்ணாமலை, இப்போது “என் தமிழ் அடையாளத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்ற முழக்கத்துடன் களமிறங்கியுள்ளார். அண்ணாமலை என்ற ஒற்றை முகத்தை நம்பி வந்த நடுத்தர வர்க்கத்தினரும் இளைஞர்களும் இப்புதிய இயக்கத்திற்கு மாறியுள்ளதால், தமிழகத்தில் பா.ஜ.க-வின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி அரசியலிலும் இந்த அதிரடிப் பாய்ச்சல் ஒரு பெரும் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.