திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது. மாநிலத்தின் மானத்தை ஆளுநரிடம் அடகு வைத்துவிட்டு, மாநில உரிமைகளைக் கர்நாடகாவிடம் பறிகொடுத்து வேடிக்கை பார்க்கும் ஒரு ‘டம்மி சி.எம்’ ஆக நீங்கள் இருக்கிறீர்கள் என அதில் சாடப்பட்டுள்ளது. சொந்தமாக 118 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல், கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்டு ஆட்சியைப் பிடித்த ஒரு ‘குதிரை பேர சி.எம்’ தான் நீங்கள் என்றும் திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.
மேலும், தேர்தலில் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டுப் பிச்சை எடுத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த உங்களுக்கு, எங்களைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என அந்தப் பதிவில் மிகக் கடுமையான வார்த்தைகளால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இரு தரப்பினருக்கும் இடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
