வீட்டுக்குள் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி… வீடியோவுடன் கையும் களவுமாக பிடித்த கணவன்.. கத்திக்குத்துக்கு பின் கண்ணீருடன் சொன்ன ரகசியம்..!!

By Muthu Mani on ஆனி 5, 2026

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் இடையாத்தி கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ராஜா, தனது மனைவி அட்சயா பியூட்டி பார்லரில் வேலை பார்த்தபோது திருச்சியைச் சேர்ந்த ஜோஸ் என்பவருடன் ஏற்பட்ட தகாத உறவால் அவர் மீது கடுமையான சந்தேகத்தில் இருந்துள்ளார். அண்மையில், அட்சயா தனது கள்ளக்காதலனுடன் வீட்டில் தனியாக இருந்தபோது கணவர் ராஜா கையும் களவுமாகப் பிடித்து வாக்குவாதம் செய்யும் ஓராண்டுக்கு முந்தைய பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் திடீரென வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, “தன் குடும்பம் அழிந்துவிட்டதாகவும், மனைவியைக் கிழித்துப் போட்டுவிட்டு மகனுடன் சாகப் போவதாகவும், இதற்கெல்லாம் காரணமான ஜோஸுக்கு காவல்துறை தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என்றும் ராஜா அழுதுகொண்டே பேசிய மற்றொரு வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், பட்டுக்கோட்டை மயில்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த இந்தத் தம்பதியிடையே ஏற்பட்ட கடுமையான தகராறில், ஆத்திரமடைந்த ராஜா காய்கறி நறுக்கும் கத்தியால் மனைவி அட்சயாவின் வாய், கன்னம் மற்றும் உதட்டுப் பகுதிகளில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

   

பின்னர் மனைவியை வீட்டிற்குள் பூட்டிவிட்டுத் தனது 4 வயது மகனுடன் ராஜா தலைமறைவாகியுள்ளார். படுகாயமடைந்த அட்சயா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகரப் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து ராஜாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், படுகாயமடைந்த அட்சயா கல்லூரி காலத்திலிருந்தே நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்பதும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவாகச் சமூக வலைத்தளங்களில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.