தவெக தலைமையிலான புதிய கூட்டணியில் தங்களுக்கு இடமில்லை என்றும், தாங்கள் எப்போதும் போல திமுக கூட்டணியில்தான் நீடிப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவர் முத்தரசன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்திற்குள் பாஜக நுழைந்துவிடக் கூடாது என்ற ஒற்றை நோக்கத்திற்காக மட்டுமே தவெக அரசுக்கு CPI ஆதரவு அளித்ததாகக் குறிப்பிட்ட அவர், புதிய கூட்டணி குறித்து பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கும், தங்கள் கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
