கனிமொழிக்கு திமுக கொடுத்துள்ள ஸ்பெஷல் டாஸ்க்.. இனி ரொம்ப ஸ்பீடு தான்… ஸ்டாலின் போட்ட செம பிளான்..!!

By Soundarya on ஆனி 5, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் சி.எம்.விஜய்க்குப் பதிலடி கொடுக்கும் முக்கியப் பொறுப்பினை திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியிடம் ஒப்படைக்க மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களைக் கண்டித்து கனிமொழி தெரிவித்தக் கருத்துக்கள், பெண்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் காரணமாக, மாநில அரசியலில் அவரை மேலும் தீவிரமாக ஈடுபடுத்தி, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை முறியடிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய வியூகத்தின் மூலம், திமுக அரசுக்கு எதிராக எழும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுப்பதோடு மட்டுமல்லாமல், தமிழக அரசியல் களத்தில் கனிமொழி இனி முழு வீச்சில் (ஆக்டிவ்வாக) செயல்படுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பெண் வாக்காளர்களைக் கவரும் வகையிலும், எதிர்க்கட்சிகளின் அரசியல் நகர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் கனிமொழியின் இந்த புதிய ‘ஸ்பெஷல் டாஸ்க்’ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.