BREAKING: தனியார்மயமாகும் டாஸ்மாக்..? நடுத்தெருவுக்கு வரும் 24,000 ஊழியர்கள்..!!

By Swetha on ஆனி 5, 2026

Spread the love

தமிழ்நாட்டில் டாஸ்மாக் சில்லறை விற்பனை மற்றும் பார்களை (Bar) மட்டும் தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய திட்டத்தின்படி, மதுபானக் கொள்முதலை மட்டும் டாஸ்மாக் நிறுவனம் நேரடியாக நடத்தும்; ஆனால் அதன் சில்லறை விற்பனைக் கடைகளும், பார்களும் ஏல முறையில் தனியாருக்கு விடப்படும் எனத் தெரிகிறது. சில்லறை விற்பனையை ஏலம் விடுவதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், பணியாளர்கள் தொடர்பான சிக்கல்களையும் அரசு நேரடியாகக் கையாள வேண்டியதில்லை என்பதே தற்போதைய தவெக அரசின் கருத்தாக உள்ளது.

இருப்பினும், இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் தற்போதைய 3,638 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் சுமார் 24,000 ஊழியர்களின் வேலைவாய்ப்பு நடுத்தெருவுக்கு வரும் என்ற பெரும் அச்சமும், அரசுக்கு எதிரான விவாதங்களும் எழுந்துள்ளன. இதற்கிடையே, பொது நலன் கருதி பள்ளிகள், கோயில்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதில் இதுவரை 512 கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தும் இந்நடவடிக்கையில் இதுவரை மூடப்பட்ட கடைகளின் முழு விவரங்கள் நாளை வெளியிடப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.