“திமுக ஆட்சியில் ₹700 கோடி ஊழல்?”…. இரவோடு இரவாக CM விஜய் அதிரடி… மொத்தமாக மாறுகிறது…!

By Nanthini on ஆனி 5, 2026

Spread the love

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கல்குவாரிகளில் சுமார் ₹700 கோடி அளவிற்கு பல்வேறு முறைகேடுகளும் ஊழல்களும் நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் பரபரப்பு புகாரை அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்தால், எதிர்காலத்தில் அரசுக்கு ஏற்படவிருக்கும் சுமார் ₹20,000 கோடி வரையிலான பெரும் வருமான இழப்பைத் தடுத்து நிறுத்த முடியும் என்றும் அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இப்புகாரின் தீவிரத்தன்மையை உணர்ந்து, கனிமவளத்துறை அமைச்சருடன் அவசர ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், இந்த மெகா ஊழல் புகார் குறித்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது மற்றும் குவாரி விதிமுறைகளை முறைப்படுத்துவது உள்ளிட்ட அதிரடியான முடிவுகளை எடுக்க உள்ளதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.