டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

By Soundarya on ஆனி 4, 2026

Spread the love

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம் முழுவதும் கொண்டு சேர்க்கும் நோக்கில் ‘வெற்றி டிவி’ என்ற புதிய செய்தி மற்றும் பொழுதுபோக்கு தொலைக்காட்சியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, தங்களின் அரசியல் நிலைப்பாடுகள், மக்கள் சார்ந்த செய்திகள் மற்றும் கட்சித் தலைவர்களின் உரைகளை எவ்வித சமரசமும் இன்றி நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க ஊடகப் பலம் அவசியம் என்பதை உணர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த புதிய தொலைக்காட்சி சேனலின் முழுமையான நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை, தவெக கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளரும், தற்போதைய தமிழக அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா கவனிப்பார் எனத் தெரிகிறது. கட்சியின் கொள்கை பரப்பு ஊடகமாகச் செயல்படவுள்ள இந்த சேனல், சமகால அரசியல் நிகழ்வுகளுடன் சேர்த்து பொதுமக்களைக் கவரும் வகையிலான தரமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் வழங்கத் திட்டமிட்டுள்ளதால், அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.