புதுக்கோட்டையில் அதிர்ச்சி.. பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த.. மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை… நள்ளிரவில் சாலையில் வீசிச் சென்ற கொடூரம்…!!

By Swetha on ஆனி 4, 2026

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய, வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஆலங்குடியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி மாலை, வேலை முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காக ராசியமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் அவர் காத்திருந்தபோது, காரில் வந்த இருவர் அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் நள்ளிரவு நேரத்தில் அவரை சாலையிலேயே விட்டுச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அருகில் இருந்தவர்களின் உதவியோடு காவல்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த மழையூர் போலீசார் அவரை மீட்டு, சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

   

போலீசாரின் விசாரணையில், இக்கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர்களான மாரிமுத்து (55) மற்றும் சேகர் (55) என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அருணாவின் உத்தரவின் பேரில், குற்றவாளிகள் இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. நேற்று போலீசார் மாரிமுத்து மற்றும் சேகர் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.