தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் கடந்த 12-ஆம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இருப்பினும், நேற்று வரை இதில் 620 கடைகள் மட்டுமே மூடப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள கடைகள் இன்னும் திறந்திருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து கடும் அதிருப்தி அடைந்த முதலமைச்சர் விஜய், விதிமுறைகளை மீறி இன்னும் மூடப்படாமல் இருக்கும் எஞ்சிய அனைத்து டாஸ்மாக் கடைகளையும் நாளைக்குள் உடனடியாக மூடிவிட்டு, அது குறித்த முழுமையான அறிக்கையைத் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தற்போது அதிகாரிகளுக்கு மிகக் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
