தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் அடுத்தடுத்து குற்றவழக்குகளில் சிக்குவது அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் நகர தவெக செயலாளரான ராஜா, வங்கியில் அடமானம் வைத்த தனது சொத்தை மீட்பதற்காக பாபு என்பவரிடம் ₹72 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார்.
ஆனால், கூறியபடி கடனைத் திரும்பச் செலுத்தாமல் ஏமாற்றியதாக எழுந்த பண மோசடி புகாரின் பேரில், ராஜா மற்றும் அவரது மனைவி ஆகிய இருவர் மீதும் தற்போது காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து ராஜாவைக்கைது செய்துள்ளது. கட்சி தொடங்கி தீவிரமாகச் செயல்பட்டு வரும் தற்போதைய சூழலில், மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கி வருவது அக்கட்சியின் பொது பிம்பத்திற்கும், அரசியல் எதிர்காலத்திற்கும் தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது.
