BREAKING: குவைத் மீதான ஈரான் தாக்குதலில் ஒரு இந்தியர் பலி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

By Soundarya on ஆனி 3, 2026

Spread the love

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் (Terminal 1) மீது ஈரான் ராணுவம் நடத்திய அதிர்ச்சி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை நிகழ்ந்த இந்த பயங்கர தாக்குதலில், வான்வழித் தாக்குதலின் தாக்கத்தால் விமான நிலையத்தின் மேற்கூரைகள் மற்றும் உட்பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன. இத்தாக்குதலில் சிக்கி இந்தியர் உயிரிழந்த தகவலை குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்து, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க குவைத் அதிகாரிகளுடன் தூதரகம் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த எதிர்பாராத கொடூர தாக்குதலில் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் உட்பட மேலும் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக குவைத் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு 25 ஆம்புலன்ஸ்கள் மூலம் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பதற்றமான சூழ்நிலை மற்றும் விமான நிலைய உள்கட்டமைப்பு சேதமடைந்ததை அடுத்து, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டு, வான்வழிப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.