யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்!.. ப.சிதம்பரம் போட்ட மாஸ் ஸ்கெட்ச்… க்ரீன் சிக்னல் கொடுத்த விஜய்.. ஆடிப்போன அரசியல் களம்..!!

By Muthu Mani on ஆனி 3, 2026

Spread the love

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய கூட்டணிக் கணக்குகளின் தொடர்ச்சியாக, காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி இடத்தைக் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அதிரடி முடிவெடுத்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகம் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக உள்ள இந்த இடத்திற்கான இடைத்தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போதைய சூழலில் இந்தத் தேர்தலில் தவெக நிறுத்தும் வேட்பாளர் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில், தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியும் இந்த ராஜ்யசபா எம்பி பதவியைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்த்தது. இதற்காக நேற்று தலைமைச் செயலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, இன்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து, காலியாக உள்ள ராஜ்யசபா சீட்டை தங்களுக்கு வழங்க வேண்டும் என அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்தார்.

   

மறைமுகமாகத் தொடர்ந்த இந்த அரசியல் நகர்வுகளின் முடிவாக, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அந்த ராஜ்யசபா சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக முதல்வர் விஜய் தற்போது அறிவித்துள்ளார். இந்த இடத்திற்கான தங்களின் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் தலைமை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டதும், அதன் மூலம் அக்கட்சியின் கிறிஸ்டோபர் திலக் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.