பேங்க் ஆப் பரோடா வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள 5,000 அப்ரெண்டீஸ் (பயிற்சி) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் தனியாக 199 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Degree) முடித்த, 20 முதல் 28 வயதிற்குட்பட்ட தகுதியான இளைஞர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் உள்ளூர் மொழித் தேர்வு (Local Language Test) ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஓராண்டு காலத்திற்கு வங்கியில் பயிற்சி அளிக்கப்பட்டு, மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை (Stipend) வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் ஜூன் 8, 2026-க்குள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.bankofbaroda.in/career/current-opportunities என்ற முகவரியின் மூலம் ஆன்லைனில் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
