விராட் கோலியை ‘சுயநலவாதி’ என்றா வைபவ் சூர்யவன்ஷி..? தீயாய் பரவும் வீடியோ… உண்மையை உடைத்த ஹர்ஷா போக்லே..!!

By Swetha on ஆனி 3, 2026

Spread the love

சமீபத்தில் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, விராட் கோலியைப் பற்றிப் பேசியதாக இணையத்தில் வெளியான வீடியோ முற்றிலும் போலியானது என்று பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், ஹர்ஷா போக்லே சூர்யவன்ஷியிடம் கேள்வி கேட்பதும், அதற்கு அவர் பதில் அளிப்பது போலவும் காட்சிகள் எடிட் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, அது உண்மைக்கு மாறான எடிட் செய்யப்பட்ட வீடியோ என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலான அந்த போலியான வீடியோவில், வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே இளம் வீரர் சூர்யவன்ஷியிடம், “நீங்களும் விராட் கோலியைப் போல ஒரு ‘ராஜா’ ஆக விரும்புகிறீர்களா?” என்று கேட்பது போலவும், அதற்கு அவர் பதில் அளிப்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. தொழில்நுட்ப உதவியுடன் மிகவும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த வீடியோ, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தையும் பரப்பபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், தற்போது அதன் உண்மைத்தன்மை அம்பலமாகியுள்ளது.

   

மறுபுறம், விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐ.பி.எல். 2026 சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்த இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆர்.சி.பி அணியின் இந்த தொடர் வெற்றி ஒருபுறம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், மறுபுறம் சூர்யவன்ஷி மற்றும் கோலி தொடர்பான இந்த போலி வீடியோ சர்ச்சை கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.