BREAKING: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

By Swetha on ஆனி 2, 2026

Spread the love

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூத்த சகோதரரான N.J. வாசுதேவன் (92) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். மைசூரில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணா அருகே இருக்கும் தனியார்த் தோட்டத்தில் தனது வளர்ப்பு மகளின் வீட்டில் வசித்து வந்த அவர், அங்கேயே உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமிற்கு, அவரது முதல் மனைவியான ஜெயம்மாவிற்குப் பிறந்தவர்தான் இந்த வாசுதேவன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுச் செய்தி அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் குடும்பப் பின்னணியில் மிக முக்கியமான ஒருவராகக் கருதப்பட்ட வாசுதேவன், வாழ்நாளின் பெரும் பகுதியை மைசூரிலேயே எளிய முறையில் கழித்தார். கடந்த சில ஆண்டுகளாகவே வயது முதிர்வு சார்ந்த உடல்நலப் பிரச்சினைகளால் அவர் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மறைந்த N.J. வாசுதேவனின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள், கர்நாடக மாநிலம் டி.நரசிபுரா தாலுகாவிற்கு உட்பட்ட அவரது சொந்த கிராமமான ரங்கராஜபுராவில்தான் நடைபெறும் என்று அவருடைய உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.